Friday, November 2, 2007

My First short story - அன்புள்ள துறோகி


அன்புள்ள துறோகிக்கு,எங்கள் வீட்டு உப்பை தின்ற உனக்கு எவ்வளவு தைரியம்,வேண்டாம் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தும் என் வீட்டிற்குள் என் அனுமதி இன்றி நுழைந்து உன்வேலையை என்கிட்டயே காட்ட வந்தாய் நீ .எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடிய போதிலும் ,விட்டுபிடிப்போம் அவனுக்கான நேரமிது என்று உனக்கு தானேடா பறிந்து பேசினேன்..அவ்வளவு பறிந்துறைக்கு காரணம்,என்ன தான் நீ கொடூரமானவனாக இருந்தாலும் அசுத்த உள்ளம் படைத்தவர்களை மட்டுமே நீ துன்புறுத்தினாய்...உன்னை ஒரு கட்டதில் வெறுக்க காரணம் துள்ளி விளையாடி கொண்டிருந்த என் தங்கை இப்போது நீ செய்த சதிகார வேலையினால் வெளியேவும் தலைகாட்ட முடியாமல் கூனி குறுகி கிடக்கிறாள். நயவஞ்ஜகா!!!..அது மட்டும் இன்றி பக்கத்து வீட்டு மாமியின் இடுப்பை தீண்டியதாக உன்னை பற்றி கேவலமான புகார்கள்..இதோ உன்னையும் உன்போல் சமுதாயத்தயும் அடியோடு ஒழிக்கிறேன் பார்..என் தங்கையின் யானை கால் நோய்க்கும், யாரை கேட்டாலும் சிக்கன் குன்யா என்று புலம்ப வைத்த உன்னை .....Allout ஆக்குகின்றோம் ...ஒரு "ஈ" க்கு கூட துரோகம் நினைக்காத என்னை இப்படி கொலைகாரியாக்கிய கொசுவே ஜாகிறதை!!! இதை கூறவே இந்த எச்சரிக்கை "ஈ மெயில்"....பதில் "ஈ மெயில்"அனுப்புனர்: கொசுவத்தி சுருளினால் பாதிக்க பட்ட கொசுஏய்! என்ன தைரியம் உனக்கு, வீட்டு தொட்டி முழுவதும் பல அயிரக்கணக்கான வருடங்களாக தேங்கி கிடக்கும் தண்ணீர்,என்னலையே நாற்றம் தாங்க முடியாத திறந்து வைத்துள்ள சாக்கடை...சிவன் கோயில் குளம் போல உங்கள் தெரு முழுவதும் தேங்கி கிடக்கும் மழை தண்ணீர்...எனக்கு கொஞ்சமும் தராமல் முழு வழைப்பழத்தையும் திண்று விட்டு தூக்கி போட்ட பழ தோல்...இப்படி எல்லா தப்பையும் உங்கள் பக்கம் வைத்து கொண்டு எங்கள் வம்சத்தை அழிக்க போகிறாயா? ஜாக்கிறதை...-கொசு(இதோ "ஈ" மேயிலை படித்த கையோடு துடைப்பமும் கையுமாக நான்,கொசுவை அடிக்க அல்ல கழிவு நீரை அப்புற படுத்த!)__________________
This story contains few errors due to typo errors.Errors are regretted!!!